செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

மீனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): எப்பொழுதும் கலகலப்பாகப்பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி  நேயர்களே! 
இந்த மாதம் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
 
குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கவனம் தேவை. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும். பணவரவுகளில் தடைகள்  நிலவுவதால் ஆடம்பர செலவுகளை தள்ளிப் போடவும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசுவழியில் தேவையற்ற சங்கடங்களைச் சந்திப்பீர்கள்.  எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்லபெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்படும். நிலுவைத் தொகைகள் கைக்குக்  கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசெல்லக்கூடிய  சூழ்நிலைகளும் உண்டாகும்.
 
பெண்களுக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் தடைகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள்  தாமதப்படும்.
 
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத  சூழ்நிலைகளும் உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள்  அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும்.  தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.
 
மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும். மதிப்பெண்கள்  குறைவதால் பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதிலும் தடைகள் உண்டாகும்.  தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
 
பூரட்டாதி - 4: இந்த மாதம் தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல்  ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய  அனுகூலம் உண்டாகும்.
 
உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். வார இறுதியில் பழைய பாக்கிகள்  வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு  பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
 
ரேவதி: இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.  கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு  உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.
 
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 31; Nov 01
 
சந்திராஷ்டம தினங்கள்: Nov 6, 7, 8.